நடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Tuesday,November 13 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 2வது மகளும், 'கோச்சடையான்', 'விஐபி 2' படங்களின் இயக்குனருமான செளந்தர்யா, கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 'தேவ்' என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் செளந்தர்யாவுக்கு அவரது கணவர் அஸ்வினுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது பெற்றோருடன் வசித்து வரும் செளந்தர்யாவுக்கு மறுமணம் நடைபெறவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

'வஞ்சகர் உலகம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளவரும் மருந்து கம்பெனி ஒன்றை நடத்தி வரும் விசாகன் என்பவர் தான் மாப்பிள்ளை. மேலும் இவர் கோவையை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பொன்முடியின் சகோதரரின் சகோதரர் வணங்காமுடி என்பவரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஜனவரியில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.