நெட்டிசன்களின் ரியாக்சனுக்கு உடனடியாக மதிப்பு கொடுத்த செளந்தர்யா ரஜினிகாந்த்!
- IndiaGlitz, [Tuesday,February 19 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவுக்கு கடந்த வாரம் நடிகரும் தொழிலதிபருமான விசாகனுடன் திருமணம் நடைபெற்றது., இந்த திருமணத்திற்கு அரசியல்வாதிகள், திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் செளந்தர்யா கடந்த நான்கு நாட்களுக்கு முன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய கணவருடன் ஐஸ்லாந்தில் தேனிலவு கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். ஆனால் இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. புல்வாமா தாக்குதலில் 44 இந்திய வீர்ர்கள் வீரமரணம் அடைந்த சோகம் நாடு முழுவதும் சூழ்ந்துள்ள நிலையில் தேனிலவு கொண்டாட்ட புகைப்படங்களின் பதிவு அவசியமா? என்ற கேள்விகள் எழுந்தன.
நெட்டிசன்களின் இந்த நியாயமான உணர்வுகளுக்கு உடனடியாக மதிப்பு கொடுத்த செளந்தர்யா, வீரமணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு தனது இரங்கலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#RIPOurBraveSoldiers #HeartBroken pic.twitter.com/Z6XlW5WHXR
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 16, 2019