செளந்தர்யா ரஜினியின் விவாகரத்து முடிவுக்கான காரணம்
- IndiaGlitz, [Friday,September 16 2016]
கடந்த சில மணி நேரங்களாக கோலிவுட்டில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வலம் வருகிறது. அதாவது ரஜினியின் இளையமகள் செளந்தர்யா தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரஜினிக்கு மிக நெருக்கமானவர்களிடம் இருந்து வெளிவந்த தகவலின்படி, இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றும் இருவரும் சில காலமாக பிரிந்துதான் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் இந்த நட்சத்திர தம்பதிகளின் நண்பர்களும், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செளந்தர்யா இதுவரை விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மீண்டும் இணைந்து தங்கள் குழந்தையுடன் வாழ ரஜினி குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சி பலிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.