விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா ரஜினிகாந்த்
- IndiaGlitz, [Saturday,September 17 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகளும், 'கோச்சடையான்' இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்யவுள்ளதாக நேற்று முதல் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் பரவி வரும் நிலையில் இந்த செய்திகளுக்கு தனது சமூக வலைத்தளத்தின் மூலம் செளந்தர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
எனது திருமணம் குறித்து வெளியாகி வரும் செய்தி உண்மைதான். நாங்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் பிரிந்துதான் வாழ்கிறோம். மேலும் நாங்கள் இருவரும் விவாகரத்து பெற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தை மேலும் பெரிதுபடுத்தாமல் எங்கள் குடும்பத்தின் பிரைவசியை காப்பாற்ற உதவுமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு செளந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.