close
Choose your channels

செளந்தர்யாவின் அடுத்த படத்தில் தனுஷ்?

Thursday, August 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தை இயக்கிய செளந்தர்யா அடுத்த படத்திற்கு தற்போது தயாராகிவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனுஷ் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தன்னுடைய அடுத்த படம் குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய அடுத்த படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடியுடன் கூடிய ஒரு ஜாலியான கதை. இந்த படத்தின் திரைக்கதை கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. தனுஷ் இந்த படத்தில் நடிப்பதாக கூறுவது உண்மையில்லை. இந்த படத்தின் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து நான் முடிவு செய்யவில்லை.
மேலும் எனது தந்தையின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் கண்டிப்பாக நான் அந்த படத்தை இயக்கவில்லை. அவருடைய வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் பாடமாக இருக்கும் என்பதால் அந்த படம் விரைவில் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த படம் குறித்து தற்போது பேசுவது பொருத்தமாக இருக்காது' என்று செளந்தர்யா ரஜினிகாந்த் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment