செளந்தர்யாவின் அடுத்த படத்தில் தனுஷ்?

  • IndiaGlitz, [Thursday,August 11 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தை இயக்கிய செளந்தர்யா அடுத்த படத்திற்கு தற்போது தயாராகிவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனுஷ் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தன்னுடைய அடுத்த படம் குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய அடுத்த படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடியுடன் கூடிய ஒரு ஜாலியான கதை. இந்த படத்தின் திரைக்கதை கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. தனுஷ் இந்த படத்தில் நடிப்பதாக கூறுவது உண்மையில்லை. இந்த படத்தின் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து நான் முடிவு செய்யவில்லை.
மேலும் எனது தந்தையின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் கண்டிப்பாக நான் அந்த படத்தை இயக்கவில்லை. அவருடைய வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் பாடமாக இருக்கும் என்பதால் அந்த படம் விரைவில் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த படம் குறித்து தற்போது பேசுவது பொருத்தமாக இருக்காது' என்று செளந்தர்யா ரஜினிகாந்த் கூறினார்.

More News

Suriya's 'Perazhagan' director passes away

Sasi Shanker, who has directed Suriya’s 2004 comedy hit for AVM banner ‘Perazhagan’ passed away today. According to reports the popular Malayalam director...

பழம்பெரும் நாடக நடிகைக்கு விஷால் உதவி

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதில்...

சாலை இல்லை, தெருவிளக்கு இல்லை. ஆனால் விஜய் மட்டும் உண்டு. ஒரு அதிசய கிராமம்

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமேஷ் கேசவன் சமீபத்தில் உதவி கலெக்டராக கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நியமனம் செய்யப்பட்டார்...

பஞ்சு அருணாச்சலமும், ரஜினி-கமலும். ஒரு பார்வை

பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட பஞ்சு அருணாச்சலம் மறைந்த சோகம் கோலிவுட் திரையுலகினர்களை ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது...

ஜீவாவின் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தின் நாயகி

ஜீவா நடித்த 'திருநாள்' கடந்த வாரம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், 'திருநாள்'...