'கபாலி'யுடன் கனெக்ஷன் ஆன 'தர்மதுரை'

  • IndiaGlitz, [Saturday,July 30 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இரண்டாவது ஹவுஸ்புல் வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்த படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகைகள் முதல் டெக்னிஷியன்கள் வரை மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்நிலையில் 'கபாலி' திரைப்படத்தில் சவுண்ட் எஃபெக்ட் மிக அருமையாகவும் உலக தரம் வாய்ந்ததாக இருந்ததாகவும் பல விமர்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. உதயகுமார் என்பவர் 'கபாலி' படத்தில் மிக அருமையாக சவுண்ட் டிசைனராக பணிபுரிந்தார் என்பதும், குறிப்பாக சண்டைக்காட்சியில் மிக நுணுக்கமாக அவருடைய பணி இருந்தது என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது இதே உதயகுமார், விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' படத்திற்கு சவுண்ட் எபெக்ட் பணியை செய்து வருகிறார். இந்த தகவலை இயக்குனர் சீனுராமசாமி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

'தர்மதுரை' படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படம் சென்சாருக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துள்ளார். சீனுராமசாமி இயக்கியுள்ள இந்தபடத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

More News

'கபாலி 2' சாத்தியமா? ரஞ்சித்- தாணு தகவல்

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படத்தின் கிளைமாக்ஸ்...

சிம்புவின் 'AAA'வில் விஜய்-தனுஷ் நாயகி?

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ்...

இந்தி ரீ-எண்ட்ரிக்கு தமன்னாவுக்கு கை கொடுத்த தோழன்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தமன்னா தற்போது பிசியாக உள்ளார். அவர் நடித்து முடித்த 'தர்மதுரை'...

மணிரத்னம் படத்தில் இணைந்த நாடக நடிகர்

கார்த்தி-அதிதிராவ் ஹைதி நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின்...

ஜெய்-அஞ்சலி திருமணம்?

ஒரு பக்கம் விஜய்-அமலாபால் விவாகரத்து குறித்த பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஜெய்-அஞ்சலி...