தர்பூசணி பழம் தான் மேலாடை: சொப்பனசுந்தரி பவித்ராவின் வேற லெவல் போட்டோஷூட்!
- IndiaGlitz, [Wednesday,July 07 2021]
சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிலா என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை பவித்ரா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொடரின் மூலம் அவர்கள் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் என்பதும் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் பவித்ராவுக்கு பெண் ரசிகைகள் ஏராளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்று அதன் பின் மாடலிங், விஜே என படிப்படியாக மீடியாவில் வளர்ந்து, விஜய்யின் ‘சர்கார்’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்த பவித்ரா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சொப்பனசுந்தரி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் சொப்பனசுந்தரி பவித்ரா என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் பவித்ரா, சமீபத்தில் பதிவு செய்த புகைப்படங்கள் கிளாமரில் உச்சகட்டமாக உள்ளது என்பதும், அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவை மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பவித்ரா, தர்பூசணி பழத்தை மட்டுமே மேலாடையாக உடுத்தி உடல் முழுவதும் பழங்களை வைத்து எடுத்த போட்டோஷூட்டிற்கு பின் இந்த போட்டோஷூட் தான் கிளாமராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.