'சொப்பன சுந்தரி': பிரபல தமிழ் நடிகையின் அடுத்த பட டைட்டில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் நடிகை நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு ’சொப்பன சுந்தரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’சொப்பன சுந்தரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தை எஸ்.ஜி. சார்லஸ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘லாக்கப்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் த்ரில் மற்றும் காமெடி படமாக உருவாக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு சாதாரணமான நாயகிக்கு முக்கியத்துவம் படமாக இருக்காது என்றும் அருவி மற்றும் கோலமாவு கோகிலா அளவுக்கு பேசப்படும் படமாக இருக்கும் என்றும் இயக்குனர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் ஒரு சேல்ஸ் கேர்ள் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் வடசென்னை பகுதியில் நடக்கும் கதையாக இந்த படம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Here’s is my next title look #SoppanaSundari Directed @SGCharles2 Check out this adorable promo video of my next, #SoppanaSundari!! Get set for a super cool entertainer!!
— aishwarya rajesh (@aishu_dil) September 5, 2022
?? https://t.co/tW5KHc0XFj @Hamsinient & @HueboxS 's #ProductionNo1 @LakshmiPriyaaC @dancersatz pic.twitter.com/NPSETLiXQc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments