பிரான்ஸில் ஒலித்த சொப்பன சுந்தரி பாடல்… வைரல் தகவல்!!!

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

 

உலகம் முழுவதும் நடத்தப்படும் வாய்ஸ் கிட்ஸ் நிகழ்ச்சிக்கு எப்போதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இத்தகைய நிகழ்ச்சி மூலம் அசாத்திய திறமை உடைய சிறுவர்களை அடையாளம் காணமுடிகிறது. அந்த வகையில் பிரான்சில் நடைபெற்ற பிரான்ஸ் தி வாய்ஸ் கிட்ஸ் நிகழ்ச்சியில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாடிய பாடல் இப்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி இருக்கிறது.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனிஷா என்ற சிறுமி இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்த சொப்பன சுந்தரி நீதானே பாடலை பாடினார். கனிஷாவின் குரலால் ஈர்க்கப்பட்ட நடுவர்கள் அவரைத் தேர்ந்தெடுத்தனர். அதைத்தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரான்ஸ் மண்ணில் தமிழ் பாடலைப் பாடிய கனிஷாவிற்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு இசையமைப்பாளர் டி. இமானுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டில் வீரசிவாஜி என்ற படத்திற்காக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது. இசையமைப்பாளர் டி. இமான் கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் ஆனர். அடுத்து கும்கி படத்திற்கு இசையமைத்தன் மூலம் பல விருதுகளையும் பெற்றார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரவிருக்கும் அண்ணாத்தே படத்திற்கும் இவர்தான் இசைமைக்க இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் 10 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.