சோபியா விடுதலைப்புலியா? சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம்

  • IndiaGlitz, [Tuesday,September 04 2018]

கனடாவில் விடுதலைப்புலிகள் அதிகம் இருப்பதால் கனடவில் படித்து கொண்டிருக்கும் சோபியாவும் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறியபோது, 'விமானத்தில் கோஷமிட்ட அந்த பெண் யார் என்பது பற்றி விசாரணை செய்ய வேண்டும். அவர் கனடாவில் படித்து கொண்டிருப்பதால் அவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஏனெனில், கனடாவில் இருக்கும் பல தமிழர்கள் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தான் பாசிஸ்ட் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

பாஜக ஒரு இந்து கட்சி. இந்துக்கள் தான் பரந்த மனப்பான்மையுடையவர்கள். அவர்களால் பாசிச மனப்பான்மையுடன் இருக்க முடியாது. அந்தப் பெண் விமானத்தில் கோஷமிட்டது விதிமீறலாகும். எனவே அவரது கைது நியாயமானதுதான்

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

More News

பராமரிப்பு இல்லாததால் சரிந்து விழுந்த மேம்பாலம்: கொல்கத்தாவில் பரபரப்பு

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடந்த 1970ஆம் ஆண்டு கட்டிய பாலம் ஒன்று இன்று திடீரென சரிந்து விழுந்ததால் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளது.

விஜய், சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்த கேரள அமைச்சர்

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் அம்மாநிலமே பெருந்துன்பத்தில் மூழ்கியிருந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியது நடிகர் சூர்யாதான்

சோபியா ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

சோபியாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அத்தனை அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே: சோபியா விவகாரம் குறித்து கமல்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி

தமிழிசை இப்படி செய்திருக்கலாம்:

ஜனநாயக நாட்டில் ஒரு கட்சிக்கோ, தலைவருக்கோ எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஜனநாயக உரிமை. பாரத பிரதமர் தமிழகம் வந்தபோதே எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் தமிழர்கள்