சிப் லைனில் சாகச பயணம் செய்த சூரி.. ஹீரோக்கள் கூட இதை செய்வார்களா? வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,May 25 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி தற்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் முக்கிய வேடத்தில் நடித்த ’விடுதலை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. மேலும் ‘விடுதலை 2’ படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ’கூழாங்கல்’ இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் இன்னும் ஒரு சில படங்களிலும் அவர் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை சுற்றுலா சென்ற சூரி அங்கு சிப் லைனில் அந்தரத்தில் சாகச பயணம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. மேலும் இந்த பதிவில் அவர், ‘உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு - இவற்றை பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி' என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

மாஸ் ஹீரோக்கள் கூட இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து சாகச பயணம் செய்வார்களா என்பது சந்தேகம் என்றும் சூரிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

நேர்ல போய் கத்தி இருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது: தோனி என்ட்ரி குறித்து அருண்ராஜா காமராஜ்..!

சமீபத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் தல தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது பின்னணியில் ஒலித்த பாடல்

இயக்குனராகிறார் கீர்த்தி சுரேஷ் சகோதரி.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

 நடிகை கீர்த்தி சுரேஷ் சகோதரி இயக்குனராகி இருப்பதை அடுத்து அது குறித்த போஸ்டர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த கார்த்தி படம்.. 3 படங்கள் மோதலா?

 ஏற்கனவே தீபாவளி தினத்தன்று இரண்டு படங்கள் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ஆக கார்த்தி படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது

கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோவா? மாஸ் வீடியோ வைரல்..!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ

இரண்டு மகன்களுடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியை தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பார்த்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரண்டு மகன்கள்