ஆத்தா மதுரை மீனாட்சிய வேண்டுகிறேன்: எஸ்பிபி குறித்து நடிகர் சூரி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைப்புயல் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் காமெடி நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் எஸ்பிபி குறித்த ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எஸ்பிபி சார்,

விவரம் தெரிஞ்சு, உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்லை!!

விடியக்கால நடந்தாலும் சரி,
வீட்ல விசேஷம்னாலும் சரி,

தாலாட்டி எங்கள தூங்க வைக்கறதும் சரி,

தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி,

எப்பவுமே உங்க பாட்டுத்தான்!!!

எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடனும், உங்க குரல கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்க ஓடனும்ன்னு

ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன்..சார்.


இவ்வாறு சூரி தெரிவித்துள்ளார்.

More News

அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி, மகளுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே.

முறுக்கு மீசை, வெண் தாடி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமலின் லுக் இதுதான்

விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது என்பதும்

கொரோனா பாதிப்பில் கடந்த 14 நாட்களாக இந்தியாதான் டாப்!!! அதிர்ச்சி தகவல்!!!

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 55,076 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

ஜிவி பிரகாஷூக்காக கார்த்திக் சுப்புராஜ் செய்த உதவி: இணையத்தில் வைரல்

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படத்தின் பாடல் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு செய்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு அவர் வெளியிட்ட பாடல்

ஆன்லைன் வகுப்பு வைக்க துடிக்கும் பள்ளிகள்- இணைய வசதியே இல்லாத 94% குழந்தைகள்!!!

இந்தியாவில் கடந்த மார்ச் 23 இரவு முதல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.