ஆத்தா மதுரை மீனாட்சிய வேண்டுகிறேன்: எஸ்பிபி குறித்து நடிகர் சூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைப்புயல் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் காமெடி நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் எஸ்பிபி குறித்த ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எஸ்பிபி சார்,
விவரம் தெரிஞ்சு, உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்லை!!
விடியக்கால நடந்தாலும் சரி,
வீட்ல விசேஷம்னாலும் சரி,
தாலாட்டி எங்கள தூங்க வைக்கறதும் சரி,
தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி,
எப்பவுமே உங்க பாட்டுத்தான்!!!
எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடனும், உங்க குரல கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்க ஓடனும்ன்னு
ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன்..சார்.
இவ்வாறு சூரி தெரிவித்துள்ளார்.
Pray for SPB sir ?????? pic.twitter.com/qqybUP4fAf
— Actor Soori (@sooriofficial) August 18, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com