'பங்கு' பக்கத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே! 'கனா' படம் குறித்து சூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த 'கனா' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர்களுக்கு பாராட்டு மழை குவிந்து வரும் நிலையில் கிறிஸ்துமஸ் போட்டி படங்களில் இந்த படம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் 'பங்கு' சிவகார்த்திகேயனுடன் தான் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தால் தனக்கு மனநிறைவை தந்திருக்கும் என்று நடிகர் சூரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
விவசாய வலியை உலகுக்கு உரக்க சொன்ன 'கனா' படத்தில் அணில் அளவு பங்களிப்பையாவது பங்கு சிவகார்த்திகேயன் பக்கத்தில் நின்று நான் செய்திருந்தால் எனக்கு பெரிய மன நிறைவாக இருந்திருக்கும். பட குழுவை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்! தமிழ் மக்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் கனா' என்று பதிவு செய்துள்ளார்.
விவசாய வலியை உலகுக்கு உரக்க சொன்ன கனா படத்தில் அணில் அளவு பங்களிப்பையாவது பங்கு @Siva_Kartikeyan பக்கத்தில் நின்று நான் செய்திருந்தால் எனக்கு பெரிய மன நிறைவாக இருந்திருக்கும். பட குழுவை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்! தமிழ் மக்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் #கனா pic.twitter.com/Bsfv78WqCF
— Actor Soori (@sooriofficial) December 21, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments