அய்யா, அண்ணன், மாமா: இளையராஜாவின் புதிய ஒலிப்பதிவு கூடம் குறித்து சூரியின் டுவீட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவின் புதிய ஒலிப்பதிவு கூடம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம்.பிரிவியூ தியேட்டர் இருந்த இடத்தில் இன்று முதல் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த ஒலிப்பதிவு கூடம் இன்று தொடங்க உள்ளதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் பாடல் ஒலிப்பதிவு தொடங்க செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அவர் செய்த பதிவு பின்வருமாறு:
ஐயா இசையின் ராஜா இளையராஜா, வெற்றிமாறன் அண்ணன் மற்றும் மாமா விஜய்சேதுபதி அவர்களுடன் இன்று எங்கள் படத்தின் பாடல் பதிவு துவங்கியது. என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான தருணம்’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் இளையராஜா மற்றும் வெற்றிமாறனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும், விஜய்சேதுபதியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் சூரி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இளையராஜாவின் ஒலிப்பதிவு கூடத்திற்கு பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐயா இசையின் ராஜா #ilaiyaraaja , @VetriMaaran அண்ணன் மற்றும் மாமா @VijaySethuOffl அவர்களுடன் இன்று எங்கள் படத்தின் பாடல் பதிவு துவங்கியது??
— Actor Soori (@sooriofficial) February 3, 2021
என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான தருணம் ❤️ ?? pic.twitter.com/asN4RGnL7z
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments