கறிக்குழம்பு மாதிரி ஜம்முன்னு இருக்கு உங்க கசாயம்: சென்னை சித்தவைத்தியருக்கு பாராட்டு தெரிவித்த சூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் உலகமே கொரோனா நோயாளிகளை காப்பாற்ற திணறி வரும் நிலையில் சென்னையை சேர்ந்த வீரபாபு என்ற சித்த வைத்தியர் தன்னிடம் வரும் கொரோனா நோயாளிகளை சித்தவைத்தியம் மூலம் குணப்படுத்தி வருகிறார். இவரிடம் வந்த கொரோனா நோயாளிகள் பலர் குணமடைந்துள்ளனர் என்பதும் இதுவரை இன்னும் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் சித்த வைத்தியர் வீரபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் சூரி, இவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:
எல்லாரையும் ஆறு மாசமா முடக்கி போட்ருச்சு இந்த பாலாப்போன கொரோனா. ரத்த சொந்தம், நெருங்கிய நண்பர்கள் யாராய் இருந்தாலும் சமூக இடைவெளி விட்டே பேசவேண்டி இருக்கு. உலகத்துக்கே இதுதான் நிலமை.
இந்த சூழலில், சென்னை சாலிகிராமம் ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள், அவரது மூலிகை கசாயம் மூலமா கொரோனாவால பாஜிக்கப்பட்ட 3500க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி இருக்காறாம். குறிப்பா இதுல ஒரு உயிர் இழப்பு கூட ஏற்படலயாம்.
எல்லாரும், எட்ட நின்னு பாக்குறப்போ, நீங்க மட்டும் இட்ட நின்னு தொட்டு பரிசோதிக்கும்போது கண்ணுக்கு தெரியிற சாமியாவே உங்கள கும்புடதோனுது. அப்படீன்னு வைத்தியம்பாத்துட்டு வர்ற அத்தனை பேரும் சொல்லும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்குங்க சார்.
இத்தனைபேரையும் காப்பாத்துன, காப்பாத்திக்கிட்டிருக்கற உங்களையும், உங்ககூட வேலை செய்யிறவங்களையும், அந்த ஆத்தா மதுரை மீனாட்சி எப்பவும் காப்பாத்துவா.
முக்கியமா நீங்க கொடுக்கிற கசாயம் , கறிக்குழம்பு மாதுரி, சும்மா ஜம்முன்னு இருக்காம். வாழ்த்துகள் வீரபாபு சார்.
இவ்வாறு நடிகர் சூரிபாபு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு கசாயம்!! நமக்கு கறிக்குழம்பு??#covid19 #Siddha pic.twitter.com/9ZD09WeuyW
— Actor Soori (@sooriofficial) August 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com