தம்பிகளா.. வேணாம்டா.. செய்தியாளர் சந்திப்பில் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சூரி..!
- IndiaGlitz, [Friday,December 20 2024]
சூரி நடித்த 'விடுதலை 2’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், படத்தை பார்த்த பின் தியேட்டர் வாசலில் செய்தியாளர்களை சந்தித்த சூரி, தம்பிகளா, வேணாம்டா? என்று செய்தியாளர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சூரி கூறியதாவது:
’விடுதலை’ முதல் பாகம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த நிலையில், தற்போது ’விடுதலை 2’ ரிலீஸ் ஆகியுள்ளது. நம் வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான உண்மையாக இந்த படம் வந்துள்ளது. எல்லோரும் இந்த படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
கமர்சியல் என்ற படத்தை தாண்டி, இந்த படத்தில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்துவிட்டு, நீங்கள் தியேட்டரில் இருந்து வரும் போது, உங்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், அன்பு தம்பிகள், அன்பு அண்ணன்கள், அனைவரும் கொண்டாடுவதை பார்க்கும் போது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. அதற்கு தகுதியான படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி என்று தெரிவித்தார்.
அப்போது, ரசிகர்கள் சிலர் அடுத்த தளபதி என்று கோஷமிட, இதனால் அதிர்ச்சி அடைந்த சூரி, வேண்டாம்டா தம்பி, உங்களில் ஒருவனாக இருப்பதே நல்லது என கையெடுத்து கும்பிட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.