எனது அடுத்த படம் முற்றிலும் வேறுபட்டது.. சூரியின் எமோஷனல் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக பதவி உயர்ந்துள்ள சூரி தற்போது பிஸியான நடிகராக இருந்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த 'விடுதலை’, ‘கருடன்’ ஆகிய திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே..
மேலும் சூரி ஹீரோவாக நடித்துள்ள ’விடுதலை 2’ ’கொட்டுக்காளி’ ஆகிய படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது அடுத்த படம் முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுபட்ட திரைப்படமாக #கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம்.
இதில் வரும் என்னுடைய பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்களிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக் கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி.
இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கனும்னு ரொம்ப கவனமா இருந்தேன். அதை சரியாவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமாக ’கொட்டுக்காளி’ நிச்சயம் இருக்கும்.
என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக #கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய #பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன்… pic.twitter.com/UhjbAFmxxs
— Actor Soori (@sooriofficial) August 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com