'கொட்டுக்காளி' படத்திற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தாரா சூரி? எந்த நடிகரும் செய்ய மாட்டாங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூரி நடித்த ‘கொட்டுக்காளி’ என்ற திரைப்படம் சமீபத்தில் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்திற்காக தான் எடுத்த வித்தியாசமான முயற்சி குறித்து சமீபத்தில் சூரி அளித்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தில் தனக்கு வித்தியாசமான குரல் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த குரலுக்கு தான் என்ன செய்தேன் என்பதை அறிந்து வெளிநாட்டில் இந்த படத்தை பார்க்க வந்தவர்கள் ஆச்சரியம் அடைந்ததாகவும் சூரி அந்த பேட்டியில் கூறியுள்ளார். கரகரப்பான குரல் வேண்டும் என்பதற்காக தான் ஒரு மருத்துவரை அணுகியதாகவும் ஆனால் ஒரு டாக்டராக நீங்கள் சொல்வதை என்னால் செய்ய முடியாது என்று அந்த டாக்டர் மறுத்ததாகவும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதபடி இந்த படத்திற்காக நான் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் சூரி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அந்த டாக்டர் தனக்கு சில அறிவுரைகள் கூறியதாகவும் அதன்படி நடந்து தான் தொண்டையைக் கவ்வும் வகையில் சில நாட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டு அந்த படத்திற்காக டப்பிங் பேசியதாகவும் சூரி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு நடிகரும் எடுக்காத ரிஸ்க்கை சூரி ஒரு திரைப்படத்தின் கேரக்டருக்காக எடுத்துள்ளதை அறியும்போது ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்துள்ளனர். அவருடைய கடுமையான உழைப்பிற்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவான ’பிப்பிள்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். சூரி, அன்னாபென் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments