3 மாஸ் சேர்ந்ததால் 'தெறி மாஸ்' ஆகிருச்சு: 'தலைவர் 168' குறித்து பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில், அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சூரி இணைந்து உள்ளார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம்
இந்த நிலையில் தலைவர் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றது குறித்து நடிகர் சூரி கூறியதாவது: என்னுடைய மிகப்பெரிய கனவு ஒன்று நனவாகியுள்ளது. தலைவர் உடன் ஒரு செல்பி எடுத்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஆனால் அவருடன் இணைந்து படம் முழுவதும் ஒரு கேரக்டரில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதற்காக ரொம்ப சந்தோசம். சந்தோசத்தின் உச்சத்தில் தான் இருக்கிறேன் என்பதுதான் உண்மை. இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு எனது நன்றி
அதேபோல் சன் பிக்சர்ஸ் அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பித்தாலும் அது வெற்றியுடன் ஆரம்பிப்பார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு படம் நடித்தால் போதும், அவர்கள் நம்மை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள். இந்த நிலையில் அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எனது நன்றிகள்
அடுத்ததாக இயக்குனர் சிவா அவர்களின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கின்றார். மாஸ் படம் எடுப்பதில் சிவா அவர்கள் ஒரு மாஸ். சிவா அவர்கள், தலைவர் மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகிய மூன்று மாஸ் சேர்ந்து உள்ளதால் இந்த படம் தெறி மாஸ் ஆக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மிகப்பெரிய ஒரு பட்டையை கிளப்பும் போகுது இந்த படம். இப்படி ஒரு வெற்றிக் கூட்டணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் நன்றி’என்று வீடியோ ஒன்றில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்
Hear what @sooriofficial has to say about acting with Superstar @rajinikanth for the first time, in #Thalaivar168@directorsiva pic.twitter.com/GVwBTJbup2
— Sun Pictures (@sunpictures) November 29, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments