ஒரு வழியாக வெளியான 'விடுதலை 2' அப்டேட்.. சூரி வெளியிட்ட சூப்பர் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ’விடுதலை 2’ படத்தின் முக்கிய அப்டேட் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் சூரி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, வாத்தியார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் சூரி தனது சமூக வலைதளத்தில் ’விடுதலை 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11:30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார். நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ. அனுராக் காஷ்யப், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், கிஷோர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய ’விடுதலை 2’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Most anticipated update is here!
— Actor Soori (@sooriofficial) July 16, 2024
Director #VetriMaaran 's #ViduthalaiPart2 First Look launch tomorrow @ 11:30 AM. StayTuned
An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre @anuragkashyap72… pic.twitter.com/X2rzGd7IZ3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments