சூரியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தகவல்.. அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Friday,May 10 2024]

நடிகர் சூரி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ’கருடன்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சூரி மற்றும் சசிகுமார் இணைந்து நடித்து வந்த ’கருடன்’ படத்தை ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கிய நிலையில் இந்த படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியிருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்தது.

மேலும் இந்த படத்தின் வீடியோ ஒன்று கடந்த ஜனவரி மாதம் வெளியான நிலையில் அதில் சசிகுமார் முன் சில குற்றவாளிகள் இருக்க, அதில் ஒருவர் தப்பித்து போகும் போது சசிகுமாரின் விசுவாசியான சூரி அந்த நபரை பிடித்து இழுத்து வருவது போன்ற காட்சி அட்டகாசமாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது ’கருடன்’ படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரையும் நடிகர் சூரி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரி மற்றும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ரோஷினி ஹரிப்பிரியன், சமுத்திரகனி, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.