வடிவேலுவை அடுத்து இன்னொரு பிரபல காமெடியனுடன் இணைந்த சூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று வெளியாகும் 'கத்திச்சண்டை' படத்தில் வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் சூரி, அடுத்ததாக இன்னொரு பிரபல காமெடி நடிகரான மொட்டை ராஜேந்திரனுடன் ஒரு படத்தில் முதல்முதலாக இணைந்து காமெடியில் கலக்க உள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்து வரும் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்ற படத்தில்தான் சூரியும், மொட்டை ராஜேந்திரனும் இணைந்துள்ளனர். இந்த வித்தியாசமான கூட்டணியின் காமெடி இந்த படத்தின் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.
அதர்வா, ரெஜினா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ப்ரணிதா, ஐஸ்ர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைப்பில், ஸ்ரீசரணவன் ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற 'கட்டிங் கட்டிங் கட்டிங்' என்ற குத்துபாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பின்னி மில்லில் போடப்பட்டிருந்த செட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments