கொரோனா விடுமுறையில் சூரி கூறிய பயனுள்ள யோசனை!
- IndiaGlitz, [Saturday,April 04 2020]
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இதுவரை சாப்பிட, தூங்க கூட நேரமில்லாமல் பிசியாக சுற்றியவர்கள் எல்லாம் கடந்த 10 நாட்களாக வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் முடங்கியுள்ளனர். வீட்டுக்குள் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு விடுமுறையில் நடிகர் சூரி ஒரு பயனுள்ள யோசனையை அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.
சூரி சற்றுமுன் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது அப்பா, அம்மா, மற்றும் உறவினர்களின் புகைப்படங்களை தனது மகனுக்கும், மகளுக்கும் காட்டி, அவர்களது அருமை பெருமைகளை கூறுகிறார். மேலும் தனது திருமண நாளில் தனது தாயார் தான் தனக்கு தாலி எடுத்து கொடுத்ததாகவும் ‘தாயை விட மிஞ்சிய அய்யரும் இல்லை, ஆண்டவனும் இல்லை என்றும் எல்லாமே நமக்கு பெற்றவர்கள் தான் என்றும் அவர்களை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை' என்றும் தனது மகளிடம் அவர் கூறும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.
மேலும் அவர் கூறியபோது, ‘இந்த கொரோனா விடுமுறையில் நம்முடைய முன்னோர்களின் புகைப்படங்கள் இருந்தால் அவற்றை எடுத்து நமது குழந்தைகளுக்கு காண்பித்து நம்முடைய முன்னோர் குறித்து அடுத்த சந்ததியினர்களிடம் கூற வேண்டும் என்றும், அப்போதுதான் நமது உறவுகள் நீடிக்கும் 'என்றும் சூரி கூறியுள்ளார். சூரி கூறிய இந்த பயனுள்ள யோசனையை பலர் பாராட்டி வருகின்றனர்.
Corona day-11#covid19 #corona #socialdistancing#indiafightscorona #stayathome pic.twitter.com/3RLQBMhRiC
— Actor Soori (@sooriofficial) April 4, 2020