சூரி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்.. இன்னொரு வெற்றிப்படமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூரி நடிப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்தை புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகின் காமெடி நடிகராக இருந்த சூரி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ’விடுதலை’ மற்றும் ’கருடன்’ ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்த இன்னொரு திரைப்படமான ’கொட்டுக்காளி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 23 என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த திரைப்படம் ருமேனியாவின் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டது என்பதும், அதேபோல் 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டது என்பதும் தெரிந்ததே. முதல் முதலாக ஒரு தமிழ் படம் இந்த திரைப்பட விழாவில் தேர்வு பெற்ற பெருமையை இந்த படம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூரி, அன்னாபென் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தின் 35 வினாடிகள் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
After all the accolades and appreciation from film festivals across the world, we are now bringing it to our audience. #Kottukkaali will be releasing in theatres on August 23.#KottukkaaliFromAug23@Siva_Kartikeyan @KalaiArasu_ @sooriofficial @PsVinothraj @benanna_love… pic.twitter.com/F0cHJgI149
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 23, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com