தியேட்டரில் சக்கை போடு போட்ட 'கருடன்'.. மூன்று ஓடிடியில் ரிலீஸ்.. தேதியும் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,July 02 2024]

சூரி நடித்த ’கருடன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது அது மட்டும் இன்றி உலகம் முழுவதும் இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்திய திரை உலகில் காமெடி நடிகர் ஒருவர் ஹீரோவாக மாறி நடித்த படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது இதுதான் முதல் முறை என்றும் கூறப்பட்டது.

பொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறினால் காமெடி கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்வார்கள் என்றும் ஆனால் சூரி அதிரடி ஆக்சன் கதைகளை தேர்வு செய்திருக்கிறார் என்பது அவர் நடித்து வெளியான ’விடுதலை’ மற்றும் ’கருடன்’ படத்திலிருந்து தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட ’கருடன்’ திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் ஜூலை 3ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் மட்டும் இன்றி வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்காக இந்த படம் சிம்ப்ளி சவுத் மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களிலும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ’கருடன்’ திரைப்படம் நாளை மூன்று ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியிலும் பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்