ஹீரோவா ஜெயிச்சிட்டார் சூரி.. 'கருடன்' படத்தின் மூன்று நாள் வசூல் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Monday,June 03 2024]

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி, ஏற்கனவே ’விடுதலை’ படத்தில் ஹீரோவாக நடித்த நிலையில் அந்த படம் நல்ல வெற்றி பெற்றது என்பதும் சூரியை ஒரு ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சூரி ஹீரோவாக நடித்த அடுத்த திரைப்படமான ’கருடன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது. பெரும்பாலான திரை விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பாக சூரியின் நடிப்பை பாராட்டி விமர்சனம் செய்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த படம் 17 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பட்ஜெட்டையும் கடந்த லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மொத்தத்தில் கதையின் நாயகனாக சூரி ஜெயித்து விட்டார் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் சூரி தற்போது நாயகனாக ’கொட்டுக்காளி’ ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.