50 கோடி வசூலை நெருங்கியபோதும் 'கருடன்' தயாரிப்பாளருக்கு ஒரு குறை: என்ன நடந்தது?
- IndiaGlitz, [Sunday,June 16 2024]
சூரி நடித்த 'கருடன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
'கருடன்’ படத்தின் வசூல் கிட்டத்தட்ட 50 கோடியை நெருங்கி விட்டதாகவும் இந்தியாவிலேயே காமெடி நடிகர் ஒருவர் ஹீரோவாக நடித்து அந்த படம் 50 கோடி வசூலை நெருங்கியுள்ளது இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
'கருடன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் திருப்தி இருந்தாலும் இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை இன்னும் வியாபாரமாக இல்லை என்று இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னணி ஓடிடி நிறுவனங்கள் அனைத்தும் இந்த ஆண்டிற்கான புதிய படங்கள் வாங்கும் பட்ஜெட்டை முடித்து விட்டதாகவும் எனவே இப்போதைக்கு வேறு படங்களை வாங்கும் ஐடியாவில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் 'கருடன்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்பதால் விரைவில் நிச்சயம் ஏதாவது ஒரு ஓடிடி நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.