கமல்-பிரபாஸ் படத்தில் இணையும் சூரி நாயகி.. ஆசை நிறைவேறியதாக அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,February 09 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபாஸ் நடித்து வரும் ’கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் சூரி படத்தின் நாயகியாக நடித்து வரும் நடிகை இணைந்துள்ள நிலையில் தன்னுடைய ஆசை நிறைவேறி விட்டதாக தெரிவித்துள்ளார்

உலகநாயகன் கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் திரைப்படம் ’கல்கி 2898ஏடி’ . சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ஏற்கனவே பல நட்சத்திர கூட்டங்கள் இருக்கும் நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகை அன்னாபென் இணைந்துள்ளார்

இவர் ஒரு சில மலையாள படங்களில் நடித்த நிலையில், தற்போது சூரி நடித்து வரும் ’கொட்டுக்காளி’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் ’கல்கி 2898ஏடி’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார். இது குறித்த தகவலை அவரே வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் அந்த ஆசை இந்த படத்தின் மீது நிறைவேறிவிட்டது என்று கூறிய அன்னாபென், தெலுங்கில் இதைவிட ஒரு நல்ல அறிமுகம் தனக்கு கிடைக்காது என்றும் பெருமையுடன் கூறினார்.

More News

மீண்டும் ஒரு மாஸ் நடிகருக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா.. அதிரடி அறிவிப்பு..!

நடிகர் எஸ்ஜே சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக நடித்தாலும் கடந்த சில ஆண்டுகளாக அவர் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார் என்பதும், நடிப்பு அரக்கனான அவரது வில்லத்தனமான நடிப்பு

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை , சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 !!

தமிழகத்தில் இசைத்துறையில் புதிய புரட்சியை உருவாக்கிய, சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், தற்போது துவங்கி  கோலாகலமாக நடந்து வருகிறது. எப்போதும்

ராஜூ முருகனின் அடுத்த படம்.. நடிப்பு அரக்கன் தான் ஹீரோவா?

ராஜு முருகனின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே படத்தில் இத்தனை பிக்பாஸ் போட்டியாளர்களா? டைட்டிலே ஃபையரா இருக்குதே?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் ஒரே படத்தில் பல பிக்பாஸ் போட்டியாளர்கள் இணைந்து நடிக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது ரசிகர்களுக்கு

'காக்கா முட்டை' மணிகண்டன் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. விரைந்த போலீசார்..!

'காக்கா முட்டை' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவரான இயக்குனர் மணிகண்டன் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை