'விடுதலை' படத்தில் சூரியின் சம்பளம் எவ்வளவு?

  • IndiaGlitz, [Monday,April 03 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டர்களில் நடித்த ’விடுதலை’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.14 கோடியும் உலகம் முழுவதும் ரூ.23 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதை அடுத்து 50 கோடி வசூலை நெருங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’விடுதலை’ படத்திற்காக நடிகர் சூரி தனது பல படங்களின் காமெடி வாய்ப்புகளை இந்த படத்திற்காக விட்டுக்கொடுத்து தனது முழு உழைப்பை கொடுத்துள்ளார். காமெடி நடிகராக இருக்கும் போது தினமும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்த சூரி, இந்த படத்தை சம்பளத்திற்காக இல்லாமல், தனக்கு ஒரு ஹீரோ அந்தஸ்து வரவேண்டும் என்பதற்காக அவர் கடுமையாக உழைத்தார்.

இந்த நிலையில் ’விடுதலை’ படத்திற்காக நடிகர் சூரிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் வெறும் 30 லட்சம் என்று ஒரு சில ஊடகங்களை தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இது முழுக்க முழுக்க வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. ’விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சூரிக்கு கணிசமான சம்பளம் தான் கொடுக்கப்பட்டுள்ளது என படக்குழுவினர்களின் வட்டாரங்களில் இருந்து நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளன.