அற்புதமான கூட்டணி: உதயநிதிக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலின் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்த நிலையில் தற்போது அவர் ’கண்ணை நம்பாதே’ ’ஏஞ்சல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் லாக்டவுன் முடிந்த உடன் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள மற்றொரு படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியானதை பார்த்தோம். பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஆர்டிக்கல் 15’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்பதும், அந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாலிவுட்டின் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் உதயநிதிக்கும், அருண்ராஜா காமராஜ் மற்றும் படக்குழுவினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘பிரதர் அற்புதமான கூட்டணி. உங்களுக்கும் அன்புத்தம்பி இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று சூரி அந்த பதிவில் கூறியுள்ளார்.
Brother arputhamana kootani ungalukum anbu thambi director @Arunrajakamaraj and team valthukkal ?? https://t.co/4UT2uFPvqQ
— Actor Soori (@sooriofficial) August 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments