அற்புதமான கூட்டணி: உதயநிதிக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!

உதயநிதி ஸ்டாலின் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்த நிலையில் தற்போது அவர் ’கண்ணை நம்பாதே’ ’ஏஞ்சல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் லாக்டவுன் முடிந்த உடன் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள மற்றொரு படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியானதை பார்த்தோம். பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஆர்டிக்கல் 15’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்பதும், அந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாலிவுட்டின் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் உதயநிதிக்கும், அருண்ராஜா காமராஜ் மற்றும் படக்குழுவினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘பிரதர் அற்புதமான கூட்டணி. உங்களுக்கும் அன்புத்தம்பி இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்று சூரி அந்த பதிவில் கூறியுள்ளார்.


 

More News

திரைப்பட படப்பிடிப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு: திரையுலகினர் குஷி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

போனிகபூரின் அடுத்த தமிழ்ப்படம்: ஹீரோ, இயக்குனர் அறிவிப்பு

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராகிய போனிகபூர், முதன் முதலாக அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தை தயாரித்தார் என்பதும்,

விநாயகர் சதுர்த்தி தினத்தில் அஜித்துக்கு நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா?

நேற்று உலகம் முழுவதும் இந்து மக்களால் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் உள்ளூர் தலைவர்கள் முதல் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வரை இந்து மத மக்களுக்கு

ஆங்கிலம் தெரியாதவர் எதற்கு பாடம் நடத்துகிறார்? விஜயகாந்த் ஆவேசம்

சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் யோகா ஆன்லைன் வகுப்பு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட தமிழ் மருத்துவர்கள், ஆயுஷ் செயலர் ராஜேஷ் கொடேஜாவிடம் தங்களுக்கு

அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை: எஸ்பிபி குறித்த லேட்டஸ்ட் அறிக்கை

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்