பங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் உருவாக்கிய ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. இந்த டீசரை சினிமா ரசிகர்கள் ரசித்து தங்கள் கருத்துக்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் திரை உலக பிரபலங்களும் இந்த டீசரை பார்த்து படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் நடிகர் சூரி தனது சமூக வலைப்பக்கத்தில் ’க/பெ ரணசிங்கம்’ படத்தின் குழுவினர்களுக்கு உறவுமுறை பெயரைச் சொல்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் விருமாண்டியை பங்காளி என்றும், விஜய் சேதுபதியை மாமா என்றும், ஐஸ்வர்யா ராஜேஷை தங்கச்சி என்றும், இசையமைப்பாளர் ஜிப்ரானை பிரதர் என்றும் கூறி, ‘’க/பெ ரணசிங்கம்’படம் மிகப்பெரிய வெற்றி அடையும். இதற்கு முன்னோட்டமே சாட்சி. வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்
நடிகர் சூரியின் இந்த வாழ்த்துக்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ’நன்றி அண்ணா! உங்கள் மீது என்றும் அன்பு செலுத்துவேன்’ கூறியுள்ளார் நடிகர் சூரியின் இந்த வித்தியாசமான வாழ்த்து சமூக வலைதளங்களில் தயாராகி வருகிறது
"க/பெ.ரணசிங்கம்" படம் மிகப்பெரிய வெற்றியடையும் இதற்கு முன்னோட்டமே சாட்சி வாழ்த்துக்கள்????#KaPaeRanasingam, @kjr_studios!@pkvirumandi1 pangali@VijaySethuOffl mama@aishu_dil thangachi@GhibranOfficial Brotherhttps://t.co/eJGDY5gZrG
— Actor Soori (@sooriofficial) May 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com