'எதற்கும் துணிந்தவன்' சூரி கேரக்டரை அறிவித்த இயக்குனர் பாண்டிராஜ்!

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில் சூரி முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவருடைய கேரக்டரின் பெயரை சற்று முன்னர் இயக்குனர் பாண்டியராஜன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி பட பலர் அவருக்கு தங்களது சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர், புகழ், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய படப்பிடிப்பு தளத்தில் சூரி தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இதனையடுத்து இது குறித்த புகைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ’இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அவனி சூளாமணி’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தில் சூரியின் கேரக்டர் அவனி சூளாமணி என்று தெரிகிறது.