திடீரென கெட்டப் மாறிய நடிகர் சூரி.. இந்த படம் தான் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்டைலிஷ் லுக்கில் தாடியுடன் இருந்த நிலையில் தற்போது தாடியை எடுத்துவிட்டு புதிய கெட்டப்புக்கு மாறி உள்ள நிலையில் அவர் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகிவிட்டார் என்பது தெரியவந்துள்ளது
சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சூரியின் காட்சிகள் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஸ்டைலிஷ் லுக்கில் தாடியுடன் இருந்த சூரி, தற்போது தாடியை எடுத்து போலீஸ் கெட்டப்புக்கு மாறும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரியின் காட்சிகளின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா இசையில் உருவான 'விடுதலை’ படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
குமரேசன் ரெடி!#ViduthalaiPart2 Shooting In Progress #vetrimaaran @rsinfotainment pic.twitter.com/aW7fzaOG77
— Actor Soori (@sooriofficial) July 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com