மூன்று தாடிக்காரர்களின் வழி வாழும், திரையுலகை ஆளும் தாடிக்காரர்: சூரி வாழ்த்து

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் கடந்த 2007ஆம் ஆண்டு ’பொல்லாதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த 13 வருடங்களில் அவர் இயக்கியது 5 திரைப்படங்கள் தான் என்பதும் அந்த 5 திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான அவரது ’அசுரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைக் குவித்ததோடு, வசூலிலும் சாதனை செய்தது

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் தொடர்ச்சியாக இன்று காலை முதல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா ரசிகர்களும் வெற்றிமாறனுக்கு தங்களது சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோவான நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வள்ளுவர், பெரியார் மற்றும் நம்மாழ்வார் ஆகிய மூன்று தாடிக்காரர்களோடு அவர் வெற்றிமாறனை ஒப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது:

வாழ்வியல் அறமாக நிற்பதில் வள்ளுவன் வழி... சுதந்திரத்தை, சுய மரியாதையை சொல்வதில் பெரியார் வழி... இயற்கையை போற்றுவதில் நம்மாழ்வார் வழி... மூன்று தாடிக்காரர்களின் வழி வாழும், திரையுலகை ஆளும் தாடிக்கார அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

More News

போதைப்பொருள் விவகார வழக்கு: இன்னொரு நடிகையும் சிக்குகிறாரா?

கன்னட திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக சமீபத்தில் கன்னட இயக்குனர் இந்திரஜித்து லங்கேஷ் அவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி

ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை பாயும்- தமிழக அரசு அதிரடி!!!

கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்போது ஆன்லைனில் வகுப்பு பாடங்களை தொடங்கி இருக்கின்றன.

ஆந்திராவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை- மீறினால் 2 ஆண்டு சிறை!!! காரணம் தெரியுமா???

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் போன்ற சில விளையாட்டுகளுக்கு தடைவித்து உத்தரவிட்டு இருக்கிறார்

போதைப்பொருள் விவகாரம்: பிரபல தமிழ் நடிகை கைது

கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாக போதைபொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி நடிகை ஒருவர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது

முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்பாதீங்க.... கீர்த்தி சுரேஷ் விளக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த'