அடுத்த ஆக்சன் படம்.. தயாரிப்பாளர், இயக்குனர் பெயரை அறிவித்த சூரி..!

  • IndiaGlitz, [Monday,August 19 2024]

நடிகர் சூரி தனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பெயரை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்த சூரி ’விடுதலை’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ச்சியாக அவர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சூரி ஹீரோவாக நடித்த ’கருடன்’ என்ற திரைப்படம் 50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது என்பதும் இந்திய திரை உலகில் ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக மாறி நடித்த படம் அதிக வசூல் பெற்றது இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை சூரி ஹீரோவாக நடித்த இன்னொரு திரைப்படமான ’கொட்டுக்காளி’ என்ற படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூரி தனது அடுத்த படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

'கருடன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் திரு.கே. குமாருடன் இணைகிறேன்.‌ இத்திரைப்படத்தை 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய திரு‌.பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். என்றென்றும் உங்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்கும், என்று பதிவு செய்துள்ளார்.

 

More News

நடிகை பிரியங்கா மோகனுக்கு பட்டம் வழங்கிய நானி.. என்ன பட்டம் தெரியுமா?

நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த 'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின்

சீரியல் நடிகைக்கு 2வது திருமணம்.. கேரள தொழிலதிபரை கரம் பிடித்தார்..!

தமிழ் டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் நடித்துள்ள நடிகை, கேரள தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்... தேதி இதுதான்..!

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்யும் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ், அட்லியை அடுத்து பாலிவுட் செல்லும் லோகேஷ் கனகராஜ்.. ஹீரோ இந்த பிரபலமா?

தமிழ் திரை உலகை சேர்ந்த பிரபல இயக்குனர்கள் பாலிவுட்டில் வெற்றி படங்களை இயக்கி வரும் நிலையில் அடுத்த கட்டமாக லோகேஷ் கனகராஜ் பாலிவுட் திரையுலகின் முன்னணி 

ரஜினியின் ‘வேட்டையன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கலா?

ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி சூர்யாவின் ’கங்குவா’  திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே நாள்களில் ‘வேட்டையன்’