வெற்றிமாறன் - சூரி படத்தின் டைட்டில், பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ’விடுதலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளது

விஜய் சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடியே ’விடுதலை’ என்ற டைட்டில் தான் வைக்கப்பட்டுள்ளது சூரி மற்றும் விஜய் சேதுபதி தனித்தனியே இருக்கும் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. இந்த படத்தில் சூரி போலீஸ் கேரக்டரிலும், விஜய்சேதுபதி கைதி கேரக்டரில் நடித்து இருப்பது போன்று போஸ்டர்கள் கூறுகின்றன

இளையராஜா இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது