நான் நாய் தான், சோறு போட்டுவளத்தவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும்: 'கருடன்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

சூரி நடித்த ’கருடன்’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ட்ரைலரில் இத்தனை வருடங்களாக காமெடி நடிகராக நடித்தவரா சூரி? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு முழுமையான ஆக்சன் ஹீரோவாக மாறி இருக்கிறார் என்றும், அவரது நடிப்பில் ஒரு வித்தியாசமான பரிணாமம் தெரிகிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிரடி ஆக்சன் காட்சிகள், விசுவாசமாக இருக்கும் அடியாள், இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் சண்டைகள் என கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த படத்தில் சூரி தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரகனி, மைம் கோபி , வடிவுக்கரசி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரைலரில் இடம் பெற்ற சில கவனிக்கத்தக்க வசனங்கள் இதோ:

’நம் ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ இயற்கையோ அதை சரியான வழியில் முடிச்சு வைக்கும்.. ஏன்னா அது நம்ம தலைக்கு மேலே கருடனா சுத்திட்டு இருக்கும்’

’நான் நாய் தான் மதினி, சோறு போட்டு வளர்த்தவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு’