மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல நடிகர்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களுடைய ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

அந்த வகையில் தற்போது பிரபல காமெடி நடிகர் சூரி தனது மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டதன் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க.

சூரி மற்றும் அவருடைய மனைவி தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

இதை கட்டாயமாக்கினால் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்கும்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் கொரோனா வைரஸ் பாதிப்பு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கேப்டன்....!தொண்டர்கள் மகிழ்ச்சி....!

நேற்று(19.05.2021) அதிகாலை 3.30 மணியளவில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சுத்திணறல்

மே மாத மின்சார ரீடிங் எப்படி எடுப்பது? மின்வாரியம் அறிவிப்பு

மே மாதத்திற்கான மின்சார ரீடிங்கை மின் நுகர்வோரே எடுக்கலாம் என மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கண்மணிகளை காப்பாற்றுங்கள்: தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கமல்ஹாசன்!

கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெற்றோர்களின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்

தமிழில் படிக்க வேண்டிய சிறந்த சரித்திர நாவல்கள்!

நாவல் இலக்கியத்தில் சரித்திர நாவல்களுக்கு ஒரு பெரிய மவுசு இருக்கத்தான் செய்கிறது.