மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல நடிகர்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களுடைய ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
அந்த வகையில் தற்போது பிரபல காமெடி நடிகர் சூரி தனது மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டதன் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க.
சூரி மற்றும் அவருடைய மனைவி தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க.#GetVaccinated pic.twitter.com/ltIny34ERB
— Actor Soori (@sooriofficial) May 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments