'சூரரை போற்று' அடுத்த அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாடலான ’மாறாதீம்’ என்ற சூர்யா பாடிய பாடல் சிங்கிள் பாடலாக சமீபத்தில் வெளிவந்து ஹிட் ஆனது என்பதும் அதனை அடுத்து விமானத்தில் வெளியான ’வெய்யோன் சில்லி’ பாடலும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சூரரை போற்று’ திரைப்படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவல் விரைவில் வெளிவர உள்ளதாகவும் இது ஒரு கிராமத்து பாடல் என்றும் இந்த பாடலை பிரபல பாடலாசிரியர் ஏகாதேசி எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பாடல் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது
சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது
I guess soon updates will drop for the next song #SooraraiPottru in very few days ... get ready for a raw rural folk written by my favourite #yegadasi
— G.V.Prakash Kumar (@gvprakash) March 6, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com