'சூரரை போற்று' அடுத்த அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

  • IndiaGlitz, [Friday,March 06 2020]

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாடலான ’மாறாதீம்’ என்ற சூர்யா பாடிய பாடல் சிங்கிள் பாடலாக சமீபத்தில் வெளிவந்து ஹிட் ஆனது என்பதும் அதனை அடுத்து விமானத்தில் வெளியான ’வெய்யோன் சில்லி’ பாடலும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சூரரை போற்று’ திரைப்படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவல் விரைவில் வெளிவர உள்ளதாகவும் இது ஒரு கிராமத்து பாடல் என்றும் இந்த பாடலை பிரபல பாடலாசிரியர் ஏகாதேசி எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பாடல் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது

More News

தாசில்தார் மனைவியுடன் கள்ளக்காதல்: தடையாக இருந்த தாய் கொலை

ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவரின் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த ஒருவர், கள்ளக்காதலிக்காக தன்னுடைய தாயாரை கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது

கேரளாவைக் கலக்கும் தமிழ் கிராமிய பாடலைக் கேட்டீர்களா..!

பிரித்விராஜும், பிஜு மேனனும் நேரில் சென்று பார்த்தனர்.  இருவரையு&

ரஜினிக்கு உதவ தயார், ஆனால் ஒரு கண்டிஷன்: சுப்பிரமணியசாமி நிபந்தனை 

ரஜினிக்கு அரசியல் ஆலோசனை வழங்கவும் அவருக்கு உதவி செய்யவும் தான் தயார் என்றும் ஆனால் அதற்கு ரஜினிகாந்த் ஒரு நிபந்தனைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும்

ரஜினியின் ஏமாற்றத்திற்கு இதுதான் காரணமா? பரபரப்பு தகவல் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார் என்பது தெரிந்ததே

அரசு பள்ளியை ரயிலாக மாற்றிய ரஜினி ரசிகர்கள்!

தனியார் பள்ளிகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.