ரசிகரின் போஸ்டரை ரீடுவிட் செய்த சூர்யா: இணையத்தில் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாக படக்குழுவினர்கள் வெளியிடும் போஸ்டரை போலவே அச்சு அசலாக ரசிகர்கள் டிசைன் செய்யும் போஸ்டர்களும் உள்ளது என்பதும் எது உண்மையான படக்குழுவினர் போஸ்டர் என்று ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர்களே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு இரண்டுமே தத்ரூபமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் ’சூரரைப்போற்று’ படத்தின் போஸ்டர் ஒன்றை ரசிகர் ஒருவர் டிசைன் செய்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைமில் இந்தப் படம் வெளியாக உள்ளதையும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சு அசலாக படக்குழுவினர்களின் விளம்பர போஸ்டரை போலவே இருக்கும் இந்த போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் ரீட்வீட் செய்துள்ளார் என்பதும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#SooraraiPottru New Fan Made Posters Design: @AnanthuSuriya
— SingamGroupThrissur™ (@singamgroup8) August 26, 2020
@Suriya_offl @rajsekarpandian @Ravikumartcr@jimmytg619 @Amballursfc#SooraraiPottruOnAmazon pic.twitter.com/uLiAmVpd8h
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments