அமேசான் ப்ரைமில் சூப்பர் சாதனை செய்த சூரரை போற்று!

  • IndiaGlitz, [Friday,February 19 2021]

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த படத்தால் ஆயிரக்கணக்கான புதிய சப்ஸ்கிரைபர் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த படம் திரையரங்குகளில் வெளிவந்திருந்தால் சூர்யாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக இருந்திருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறி வந்தன. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி நூறு நாட்கள் ஆனதை அடுத்து சூரரைப்போற்று படக்குழுவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். அந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் பட நிறுவனம் தனது நன்றியை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அமேசான் பிரைம் இந்தியாவில் சூரரைப்போற்று ஒரு சூப்பர் சாதனையை செய்துள்ளது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படம் பிராந்திய மொழியில் மிக அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனை அடுத்து சூரரைப்போற்று செய்த இந்த சூப்பர் சாதனையை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
 

More News

80களின் பிரபலங்களுடன் பிக்பாஸ் சுரேஷ் தாத்தா: வைரல் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுவராசியமான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவர் ஒரு புகைப்படத்தை

சென்னை மெட்ரோவில் பணியாற்றும் திருநங்கைகள்… புது திருப்பத்தை ஏற்படுத்தும் வைரல் வீடியோ!

ஒரு காலத்தில் திருநங்கைகளைப் பார்த்தாலே வெறுப்பை கொட்டும் தமிழ்ச் சமூகம் இன்றைக்கு நவீனக் கருத்துக்களாலும் சினிமாவின் தாக்கத்தாலும் ஓரளவு முன்னேற்றம் கண்டு இருக்கிறது.

என்னன்னு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்? எருமைச்சாணி ஹரிஜாவின் வைரல் புகைப்படம்!

எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற ஹரிஜா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து 'என்னவென்று கெஸ் பண்ணுங்கள் பார்க்கலாம்' என்று கூறியிருப்பது

கூடங்குளம், சிஏஏ, கொரோனா விதிமுறை மீறல் வழக்குகள் குறித்து தமிழக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா பரவல் காலத்தில் விதிமுறைகளை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் வைத்த முக்கிய வேண்டுகோள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழக முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: