30ஆம் தேதி வெளிவருமா? ’சூரரை போற்று’ ரிலீஸ் குறித்து சூர்யா அறிக்கை

  • IndiaGlitz, [Thursday,October 22 2020]

சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் விளம்பரம் எதுவும் வெளியாகாததால் இந்த படம் 30ஆம் தேதி வெளியாகுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது

இந்த நிலையில் தற்போது அதை உறுதி செய்வது போல் சூர்யா இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இந்திய விமான படை குறித்த காட்சிகள் இருப்பதால் இந்திய விமானப்படையில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய நிலை இருப்பதாகவும், அந்த சான்றிதழ் பெற கால தாமதமாகி வருவதாகவும் எனவே இந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சூர்யா தெரிவித்துள்ளார்


இருப்பினும் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் சூர்யா ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக சற்றுமுன்னர் ‘சூரரைப்போற்று’ படத்தின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது