'சூரரை போற்று' டிரைலர் ரன்னிங் டைம் குறித்த தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’சூரரை போற்று’திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை பட தயாரிப்பு நிறுவனமும் ஓடிடி நிறுவனமும் விறுவிறுப்பாக செய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது ’சூரரை போற்று’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ’சூரரை போற்று’படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரின் ரன்னிங் டைம் ஒரு நிமிடம் 52 வினாடிகள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
’சூரரை போற்று’திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளி வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் சூர்யா ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ள இந்த படத்தில் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
• Exclusive : #SooraraiPottruTrailer - Length 1min 52secs ( 112 Secs )
— Suriya Fans Trends ™ (@Suriya_Trends) October 19, 2020
Update⏳@Suriya_offl #SooraraiPottru pic.twitter.com/F6FTAOGGj3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments