'தர்பார்' படம் பார்க்கும் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பெரும்பாலான திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டதால் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க தற்போது உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’தர்பார்’ படம் பார்க்க வரும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கின்றது என்ற உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளது. சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த டீசர் சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் ’தர்பார்’ படம் வெளியாகும் தியேட்டர்களில் ’சூரரைப்போற்று’ படத்தின் டீசரை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே தர்பார் படம் செல்லும் சூர்யா ரசிகர்களுக்கு ’சூரரைப்போற்று’ படத்தின் டீசரை பெரிய திரையில் பார்க்கும் இன்ப அதிர்ச்சி அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Breaking news: #SooraraiPottruteaser content dispatched to all digital content service providers...
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) January 6, 2020
Teaser will play during #Darbar interval at selected theatres in Entire TN.#SooraraiPottru
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com