'சூரரை போற்று' டீசர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு சமூக வலைத்தளங்களில் ஒருநாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சற்றுமுன் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ’சூரரை போற்று’ படத்தின் டீசருக்கான தீம் மியூசிக் தயாராகிவிட்டதாகவும், இந்த தீம் மியூசிக், ‘மாறா மாறா’ என்று அழைக்கப்படும் என்றும், விரைவில் டீசரை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ‘சூரரை போற்று’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்பது இதன்மூலம் உறுதியாகிறது. ஜிவி பிரகாஷின் இந்த டுவிட்டுக்கு சூர்யா ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியுள்ளார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இண்ட படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A special theme is being composed for the teaser of #SooraraiPottru ... it wil be called as #Maara ... #maara will rise soon ... ????
— G.V.Prakash Kumar (@gvprakash) November 12, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com